கேளடி கண்மணி !
கேளடி கண்மணி !
கவி கேளடி பெண்மணி!
பூக்களோ பவளங்களோ இல்லடி ..
நீ வந்த பாதை கற்களும் முட்களுமடி !
தென்றல்தான் நீயென்று சொல்வாரடி ..
உன் புயற்பயணங்களின் வீரியம் அறியாதவரடி !
உன் புயற்பயணங்களின் வீரியம் அறியாதவரடி !
நஞ்சு உன் வார்த்தையெனச் சொல்வாரடி ..
சுயமரியாதையின் போர்வையதென தெரியாதவரடி !
சுயமரியாதையின் போர்வையதென தெரியாதவரடி !
கைக்கொட்டி கேலியாய் சிரிப்பாரடி ..
நீ வெறும் பெண்தானே என்றும் உரைப்பாரடி !
நீ வெறும் பெண்தானே என்றும் உரைப்பாரடி !
உன்னுடைகள் தான் இவை அவையென குறிப்பாரடி ..
பெண்ணென்றால் புவியென உணராதவறடி!
பெண்ணென்றால் புவியென உணராதவறடி!
திரை விளக்கி நீ கேட்டால் தடுப்பாரடி ..
கொஞ்சம் நீ பாரடி .. அவர் மதியற்றோரடி!
கொஞ்சம் நீ பாரடி .. அவர் மதியற்றோரடி!
சபைமுன் உன் சொற்களைக் களைப்பரிப்பாரடி ..
மாகாளியின் உறு நீயென்று மறந்தோரடி !
உன் குறளுக்கோ அளவுகோள் அளப்பாரடி ..
குவியுமே கரகோஷங்கள் ஓர்நாள் ! நீ களங்காதடி !
குவியுமே கரகோஷங்கள் ஓர்நாள் ! நீ களங்காதடி !
பெண் துரிதம்தான் ஆபத்தென அலர்வாரடி ..
ஆண் ஆதிக்கத்தின் விழும்பது ! விலகிச்செல்லடி !
தலை குனிந்து வெட்கிச்செல்ல சொல்வாரடி ..
நேர்கொண்ட பார்வையின் தன்னலமறியாதவரடி !
நேர்கொண்ட பார்வையின் தன்னலமறியாதவரடி !
மணங்கொண்டவளை அடியவளாக ஆட்பறிப்பாரடி ..
மங்கை அவளுக்கோர் மனமுண்டென்று உணராதவரடி ..
இரவல்ல உன் பொழுதென்று அடைப்பாரடி ..
உன் கனவுகட்கு, இரவில்லை பகலில்லை என தெரியாதவரடி !
பிஞ்சு கைகூப்பி நாம் கெஞ்சியதை புறக்கணித்தாரடி ..
நம் பைகளில் மாற்றாய் பிறந்த சில மிருகங்களடி !
தாயென்றும் துணையென்றும் சேய்யென்றுமானாயடி ..
கவினாகவும் மதியாகவும் வழிகாட்டி வாழ்வாயடி ..
கவினாகவும் மதியாகவும் வழிகாட்டி வாழ்ந்தாயடி ..
தாயென்றும் துணையென்றும் சேய்யென்றுமாவாயடி !
கேளடி என் கண்மணி !
உன் வினாவை உறக்கவே பெண்மணி !
உன் வினாவை உறக்கவே பெண்மணி !
- மாயா








